கட்டுப்படுத்தும் முறை:
- விதைக்கிழங்குகள் மற்றும் மண்ணில் கிருமிகள்நீண்ட நாள்கள் இருப்பதால் கட்டுப்படுத்துவது கடினம். நோயால் பாதிக்கப்படாத விதைக்கிழங்குகளை உபயோகப்படுத்துவதன் மூலம் நோய்த்தாக்கத்தைக் குறைக்கலாம்.
- விதைக்கிழங்குகளை நடுவதற்கு முன் பரிக் அமிலத்தில்(3%, 30 நிமிடத்திற்கு) விதை நேர்த்தி செய்து நிழலில் உலர வைக்க வேண்டும்.
- கிழங்குகளை சேமிப்பதற்கு முன் அதே சிகிச்சையைப் பின்பற்ற வேண்டும்.
- நடவு நேரத்தில், மண்ணை PCNB (30 கிலோ/ ஹெக்டர்) மூலம் நோய்த்தொற்றைக்குறைக்கலாம்.
- கோதுமை, பட்டாணி, ஓட்ஸ், பார்லி, லுபின், சோயாபீன்ஸ், சோளம் மற்றும் கம்பு போன்றவற்றை பயிர் சுழற்சி செய்வதன் மூலம் நோய் வளர்ச்சியை சரி பார்க்கலாம்.
- சமவெளியில் விதைக்கிழங்குகளை டி.பி.ஜெட் + அசிட்டிக் அமிலம் + 0.05% துத்தநாக சல்பேட் கரைசலில் அல்லது கார்பென்டாசிம் 1% ல்15 நிமிடங்கள் விதை நேர்த்தி செய்வதன் மூலம் நோயைக்கட்டுப்படுத்தலாம். கிழங்கை மெர்க்கரிக் குளோரைடு 0.1% கரைசலில் ஊற வைக்க வேண்டும்.
|